×

வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய கொடிமர கும்பாபிஷேகம்

சிப்காட்: காட்பாடி அடுத்த புகழ் பெற்ற வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமாத பிரமோற்சவமும்  தேர் திருவிழா வெகு விமர்ச்சையாக நடைபெறும்.  அதேபோல் ஆடி கிருத்திகை விழாவில் அண்டை மாநிலங்கள் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இதற்கிடையே மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி குகை கோயிலுக்கு பக்தர்கள் உதவியுடன் 50 அடி உயரத்தில் 3 டன் எடை 5 அடி சுற்றளவு கொண்ட தேக்கு மரத்தாலான புதிய கொடி மரம் கடந்த மாதம் 18ம் தேதி  பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதற்கான கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் கணபதி யாகத்துடன் பூஜை தொடங்கியது. தொடர்ந்து நேற்று யாக சாலை பூஜையும், கலச புறப்பாடும் நடந்தது. பின்னர் புதிய கொடி மரத்திற்கு மகாகும்பாபிஷேகம், தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆனையளார் அசோக்குமார், செயல் அலுவலர்கள் நிர்மலா, மாதவன் மேலாளர் நித்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vallimalai Subramaniya Swami ,
× RELATED வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...