×

திருவள்ளூர் அடுத்த ஈக்காடிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை பைக்கில் 3200 கி.மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் சென்றடைந்து இளைஞர் சாதனை: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் இரு சக்கர வாகனத்தில் 3200 கி.மீட்டர் தூரம் பயணித்து இந்திய எல்லையை அடைந்து உலக சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த இளைஞருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான். இவரது மகன் முகமது உமர் (26). இவர் தனது தந்தை நடத்தி வரும் மரக்கடையை பராமரித்து வந்துள்ளார். இருப்பினும் சாதனை படைக்க வேண்டும் என்றும் அதனால் ஊருக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் ஈக்காட்டிலிருந்து இந்திய எல்லையான ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் செல்ல தீர்மானித்தார். இதனையடுத்து கடந்த 1.6.2022 அன்று காலை 6.10 மணிக்கு ஈக்காடு பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, மற்றும் டெல்லி வழியாக இந்திய எல்லையான ஜம்மு காஷ்மீர் சென்று லடாக் பகுதியை 3.6.2022 காலை 6.10 மணியளவில் சென்றடைந்துள்ளார்.இரு சக்கர வாகனத்தில் கேமரா, ஜிபிஆர்எஸ் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தப்பட்டு இரு சக்கர வாகனம் செல்லும் பாதையை கண்காணிக்கப்பட்டது.இதனையடுத்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு ஆகிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் பெட்ரோல் போட்ட போது வாங்கிய பில் முதல் வழியில் தண்ணீர் வாங்கியதற்கான பில் வரை அனைத்து ஆதாரங்களையும் சம்ர்ப்பித்தார் முகமது உமர். தண்ணீர் மட்டுமே குடித்து 48 மணி நேரத்தில் இந்த சாதைனை படைத்துள்ளார்.இதனை பரிசீலித்த இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்தார் 3200 கி.மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்ததாக பதிவு செய்தனர்.இதனையடுத்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த முகமது உமர் நேற்று தனது சொந்த ஊரான ஈக்காடு பகுதிக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து சேர்ந்தார்.அவரை திருவள்ளூர் நகர் மன்ற உறுப்பினர் டி.கே.பாபு மற்றும் ஈக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் சத்யா மற்றும் கிராம மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர்….

The post திருவள்ளூர் அடுத்த ஈக்காடிலிருந்து ஜம்மு காஷ்மீர் வரை பைக்கில் 3200 கி.மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் சென்றடைந்து இளைஞர் சாதனை: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் மற்றும் கலாம் வேர்ல்டு ரெக்கார்டு சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Ekkad ,Jammu and ,Kashmir ,Ekkadu ,
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...