சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்ட அபார்ட்மென்ட் அமைந்துள்ளது. இந்த அபார்ட்மென்ட்டில் நடிகர்கள் ஒவ்வொரு குடியிருப்பையும் தலா ரூ.30 கோடி முதல் ரூ.15 கோடி வரை வசதிகளுக்கு ஏற்ப வாங்கி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள்தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.பிரபல நடிகர்கள், நடிகைகள் பலர் இங்கு வீடுகள் வாங்கியுள்ளனர். இந்த வீட்டில் அனைத்துமே ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும்படி டிசைன் செய்யப்பட்டுள்ள நிலையில், டாய்லெட் மட்டுமே சுமார் 7 லட்சம் ஏழு லட்சம் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு வீடுகளிலும் தியேட்டர், லிப்ட் வசதி, நீச்சல் குளங்கள் கொண்டு சென்னையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரே அபார்ட்மென்ட் இதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்கனியில் நீச்சல் குளம் இருப்பதே இந்த வீடுகளில் செய்யப்பட்டுள்ள சிறப்பு வடிவமைப்பு என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் அதிக பட்ஜெட் வீடுகளில் உடலை ரிலாக்ஸ் படுத்தும் ஸ்பெஷல் சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன் விலை மட்டும் ரூ.3.50 லட்சம். இது துபாயிலிருந்து வரவழைக்கப்பட்டது. இந்த அபார்ட்மென்ட்டில் வீடுகள் வாங்க தமிழ் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி, பிற தென்னிந்திய மொழி நடிகர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.
The post பட்டினப்பாக்கம் கண்ணாடி மாளிகை அபார்ட்மென்ட்டில் வீடு வாங்குவதில் நடிகர், நடிகைகள் ஆர்வம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.