×

நிலுவை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29ம் தேதி கலெக்டர் அலுவலகங்கள் எதிரே வேலை நிறுத்த போராட்டம்-தற்காலிக தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு

சித்தூர் : சித்தூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஏஐடியுசி ஊழியர்கள் சங்கம் சார்பில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இவர்களுக்கு ஆதரவாக ஏஐடியுசி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனவுடன் தற்காலிக தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக கூறி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்தது.  கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை. அதேபோல் தற்காலிக பணியாளர்களுக்கு மாதம் ரூபாய் 18000 சம்பளம் வழங்குவதாக தெரிவித்தார்.தற்போது வரை அவர் அறிவித்த சம்பளம் வழங்கப்படுவதில்லை.  மாநில அரசு துறை பணியாளர்களுக்கு வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கி வருகிறது இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோல் தற்காலிக பணியாளர்களுக்கு ஹெல்த் அலவன்ஸ் மாதம் ரூபாய் 3000 வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இதுவரை வழங்கப்படவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதேபோல் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மே மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தூய்மைப் பணியாளர்கள் தங்களின் உயிரை பணயம் வைத்து நகரத்தை, மாநகரத்தை, பேரூராட்சியை, கிராமங்களை தூய்மைப்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தூய்மை பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு மாநில அரசு எதற்காக காலதாமதமாக சம்பளம் வழங்குகிறது என புரியவில்லை. ஆகவே இதனை கண்டித்து வரும் 29-ம் தேதி தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே, மாநில அரசு உடனடியாக அறிவித்த 18 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும். மாதாமாதம் 1-ம் தேதிக்கு சம்பளம் வழங்க வேண்டும். அதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு ஜதை சீருடைகள் வழங்க வேண்டும். சோப்பு எண்ணெய் கையுறை, காலுறை வழங்க வேண்டும். அதேபோல் தூய்மை பணியாளர்களுக்கு தூய்மை செய்யும் துடைப்பம் உள்ளிட்டவை வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஹெல்த் அலவன்ஸ் உடனடியாக வழங்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளை உடனடியாக மாநில அரசு ஏற்க வேண்டும். இல்லையென்றால் வரும் 29-ம் தேதி மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏஐடியுசி ஊழியர் சங்க நகர தலைவர் கோபி, துணை தலைவர் மணி செயலாளர் கிட்டு பாய், பொருளாளர் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post நிலுவை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 29ம் தேதி கலெக்டர் அலுவலகங்கள் எதிரே வேலை நிறுத்த போராட்டம்-தற்காலிக தூய்மை பணியாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chittoor ,AIDUC Employees Association ,Collector's Offices ,Dinakaran ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...