×

இரூர், கீழக்கரை கிராமங்களில் வெங்காயம் தாள் நீக்கும், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் குறித்து செயல்விளக்கம்

பெரம்பலூர் : இரூர், கீழக்கரை கிராமங்களில் வெங்காயம் தாள் நீக்கும் இயந்திரம், வெங்காயம் தரம்பிரிக்கும் இயந்திரங்களி ன் செயல்விளக்கத்தை வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து விவசாயி களுக்கு செய்து காட்டினர்.பெரம்பலூர் மாவட்டம், ஆல த்தூர் தாலுக்கா,இரூர் கிராமத்தில் பெரம்பலூர் மாவட் ட வேளாண்மைப் பொறியி யல் துறை மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து, வெங்காயம் தாள் நீக்கும் இயந்திரம் மற்றும் வெங்காயம் தரம் பிரிக்கும் இயந்திரம் ஆகியவற்றின் செயல்விளக்கங்களை விவசாயிகளுக்குச் செய்துகாட்டியது.பெரம்பலூர் மாவட்டவேளா ண்மை பொறியியல்துறை யின் தலைமைப் பொறியாளர் (வே.பொ) முருகேசன் த லைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தி யத் தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனமுதன்மை விஞ்ஞானிகள் டாக்டர் செந்தில்குமரன், டாக்டர் கரோலின் ரத்தினகுமாரி,திருச்சி மண்டல கண்காணிப்புப் பொறியாளர் (வே.பொ) குமார கணேஷ், திருச்சி பயிற்சிமைய செயற்பொறியாளர் (வே.பொ) குமரே சன், பெரம்பலூர் மாவட்ட செயற் பொறியாளர் (வே. பொ) கிளாபின் இஸ்ரேல், தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா,பெரம்ப லூர் உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அறிவழகன், ரோவர் வேளாண் அறிவியல் மையத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் நேதாஜி மாரியப்பன் மற்றும் வேளாண் பொறி யாளர்கள் அஸ்வினி பிரியா, வீரபாண்டியன், ஷர்மிளா, அஜிதா, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். சுமார் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் கலந்து கொ ண்டு இயந்திரங்கள் குறித்த விபரங்களைக் கேட்டு அறிந்தனர். மேலும், புதிய மற்றும் நவீன தொழில் நுட் பம் கொண்ட இந்த இயந்திரத்திற்கான செயல் விளக்கம் மிகவும் பயனள்ளதாக இருந்ததாக விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக பெரம்பலூர் வட்டாரம் கீழக்கரை கிராமத்தில் இதே செயல் விளக்கம் நடைபெற்றது. இங்கும்திரளான விவசாயிகள் கலந்து கொண்டு பயன டைந்தனர்….

The post இரூர், கீழக்கரை கிராமங்களில் வெங்காயம் தாள் நீக்கும், தரம் பிரிக்கும் இயந்திரங்கள் குறித்து செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Irur ,Keezhakarai ,Perambalur ,Agarai ,Dinakaran ,
× RELATED இரூர் பள்ளியில் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழியனுப்பு விழா