×

சனியால் ஏற்பட்ட துன்பங்கள் விலகி செல்ல சனி பிரதோஷ வழிபாடு

சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு பலன் அதிகம். அதனாலேயே இதை சனி மஹா பிரதோஷம் என்று அழைப்பர். சனி இருந்து அமிர்தத்தோடு தோன்றிய விஷத்தை சிவபெருமான் சனி கிழமையில்தான் உண்டார். ஆகையால் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்றழைக்கப்படுகிறது. சனி பிரதோஷ வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக செய்கிறாரோ அவருக்கு 120 வருட பிரதோஷ வழிபாட்டிற்கான பலன் கிடைக்கும் என்கிறது சிவகாமம். சனி பிரதோஷம் போல என்கிறது பல வகை உள்ளன.

ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘ஆதிப் பிரதோ‌ஷம்’ என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சோமவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘மங்கள வாரப் பிரதோ‌ஷம்’ என்றும், புதன்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘புதவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வியாழக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘குருவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சனி பிரதோஷத்திற்கே சிறப்புக்கள் அதிகம்.

இன்று கோயிலிற்கு சென்று வழிபடுவதால் சனியால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் விலகி செல்லும். ஈஸ்வரனையும், சனிஸ்வரனையும் இன்று விரதமிருந்து வழிபட்டால் சனி தோஷம், ஏழரை சனி, வழிபட்டால் சனி போன்ற பிரச்சனைகள் விலகும். ஒரே ஒரு சனி பிரதோஷத்தன்று சிவன் கோயிலிற்கு சென்றால் ஐந்து ஆண்டுகள் சிவன் கோயிலிற்கு சென்ற பலன்களை பெறலாம் என்கிறார்கள் சிவனடியார்கள். நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை நெற்றியில் வேண்டும்.

மாலை சிவன் கோவிலிற்கு சென்று அருகம்புல்லை நந்தி தேவருக்கு அர்ப்பணித்து நெய்தீபம் ஏற்றி நந்தியையும் சிவனையும் மனதார வழிபட்டு வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பின் சனிபகவானை வணங்க வேண்டும். இதன் மூலம் சனி பகவானால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க பரிகாரம் இன்று மூன்று வேலையும் விரதம் இருப்பதே சிறந்தது. மூன்று வேலையும் உணவு உண்ணாமல் இருக்க முடியாது என்றால் மாலை 6 இருக்க விரதம் இருப்பது சிறந்தது. சிவ பெருமான் அபிஷேக பிரியன் என்பதனால் தூய பசும்பால் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்யலாம்.

Tags : Saturn Prado ,suffering ,Shani ,
× RELATED தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு...