- நகுல்
- தேவயானி அருகம்
- சென்னை
- தேவயானி தம்பி நகுல்
- ஆர்த்தன பின்
- ஆர்.ஜி.கே. 5656 தயாரிப்புகள்
- டாட்டோ பா
- சுபாஸ்கரன்
- எஸ் ரவிக்குமார்
- தேவயானி உரும்கம்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: தேவயானி தம்பி நகுல், அர்த்தனா பினு ஜோடிசேர்ந்து நடித்துள்ள படம், ‘வாஸ்கோடகாமா’. ஆர்ஜிகே எழுதி இயக்கியுள்ளார். 5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ பா.சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.எஸ்.ரவிகுமார், சாந்தனு, ஜெகன், இயக்குனர் அறிவழகன், ‘பாய்ஸ்’ மணிகண்டன், ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், இசை அமைப்பாளர் அருண் என்.வி., பாடகர் அந்தோணி தாசன், இணை தயாரிப்பாளர் கோபிநாத் நடராஜன் பங்கேற்றனர். அப்போது தேவயானி உருக்கத்துடன் பேசியதாவது:
என் தம்பி நகுலை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ‘பாய்ஸ்’ படத்துக்குப் பிறகு அவன் நடித்திருந்த ‘காதலில் விழுந்தேன்’ படத்தைப் பார்த்தபோது, அவனுக்குள் ஏற்பட்ட மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. அவன் ஒரு நல்ல கதைக்காகவும், இயக்குனருக்காகவும் காத்திருக்கிறான். நகுல் திறமையான நடிகன் மட்டுமில்லை. நன்றாக ஆடுவான், பாடுவான், இசை அமைப்பான். அவனுக்கு நான் அக்கா இல்லை; இன்னொரு அம்மா. இன்று என் அப்பாவும், அம்மாவும் இல்லை. அவர்கள் இருந்தால், இன்று எங்களைப் பார்த்து அதிகமாக சந்தோஷப்பட்டு இருப்பார்கள்.
The post நான் நகுலுக்கு அக்கா இல்லை அம்மா!: நடிகை தேவயானி உருக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.