×

பொன்னாச்சி அம்மன் கோயில் குண்டம் விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியில் பொன்னாச்சி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி வனப்பகுதியில் பொன்னாச்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோயில் குண்டம் திருவிழா கடந்த 16ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதில் நேற்று மதியம் குண்டம் திருவிழா நடந்தது. படைக்கலத்துடன் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியாக குதிரையிடம் வாக்கு கேட்கப்பட்டது. இதையடுத்து பொன்னாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் அத்தாணி, செம்புளிச்சாம்பாளையம், பெருமாபாளையம், நகலூர், குப்பாண்டம் பாளையம், கீழ்வாணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதன்பின் அம்மனுக்கு பொங்கல் வைத்து அருகிலிருந்த முனியப்பனுக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வனப்பகுதியில் அமைந்துள்ள கோயில் என்பதால் அந்தியூர் வனத்துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags : Ponnachi Amman Temple Kundam Festival ,devotees ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்