×

பைரவருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த திருகண்டேஸ்வரம் பகுதியில் புகழ்வாய்ந்த ஹஸ்த தாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் அமைந்துள்ள ஆனந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் உள்ள விநாயகர், அம்மன், சுப்பிரமணியர், துர்க்கை உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

ஆனந்த கால பைரவருக்கு சிறப்பு பரிகார ஹோமங்கள் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்குமேல் ஆனந்த கால பைரவருக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவித்தும், மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் மகா தீபாராதனை நடந்தது. ஆனந்த கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags : Bhairav ,
× RELATED பைரவருக்கு ஏன் நாய் வாகனம்