×

திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 10, 12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சாதனை

திருவள்ளூர்: நடந்து முடிந்த 12ம் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் திருநின்றவூரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு: 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் எம்.மேகலா என்ற மாணவி தமிழ் – 96, ஆங்கிலம் – 95 பொருளாதாரம் – 100, வணிகவியல் – 100, கணக்கியல் – 100, வணிக கணிதம் – 99 என 600 க்கு 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் எப்.ஜெஸ்சிகா கேத்தரின் என்ற மாணவி, தமிழ் – 97, ஆங்கிலம் – 95, இயற்பியல் – 99, வேதியியல் – 98, உயிரியல் – 100, கணிதம் 99 என 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளார்.மேலும் பி.அரிணியா என்ற மாணவி தமிழ் – 98, ஆங்கிலம் – 88, பொருளா தாரம் – 99, வணிகவியல் – 100, கணக்கியல் – 99, வணிக கணிதம் – 99 என 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேபோல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏ.பாலாஜி என்ற மாணவன் தமிழ் –  98, ஆங்கிலம் – 98 கணிதம் – 99, அறிவியல் – 99, சமூக அறிவியல் – 98 என 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். அதேபோல் ஆர்.சாலி ரையானா என்ற மாணவி தமிழ் – 97, ஆங்கிலம் – 98 கணிதம் – 97, அறிவியல் – 98, சமூக அறிவியல் – 91 என 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.மேலும் கே.கண்மணி என்ற மாணவி தமிழ் – 96, ஆங்கிலம் – 96 கணிதம் – 97, அறிவியல் – 97, சமூக அறிவியல் – 94 என 500க்கு 480 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் ஆர் சவுமியா என்ற மாணவி சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ மாணவிகளை பள்ளியின் நிறுவனர் ஒய்.ஜான்சன், தாளாளர் குலோரி ஜான்சன், துணைத் தலைவர் ஜான் ஜே.வின்சிலி, மூத்த முதல்வர் ஜே.ஜாஸ்மின் சுஜா, முதல்வர்கள் ஷபா வின்சிலி, நியூஜிலின் ஜெபா மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தனர்….

The post திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் பள்ளியில் 10, 12ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Thirunandavur St John's School ,Thiruvallur ,St John's Matriculation High School ,Thirunandavur ,St John's School of Thirunavur ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்