- தொழிலாளர் தினம்
- சென்னை
- சிங்கப்பூர் கார்னி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சிங்கப்பூர்
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
சென்னை: சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் ‘உழைப்பாளர் தினம்’ சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சிங்கப்பூர் நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் தமிழ்நாட்டில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். ஒரு வெளிநாட்டு தொழிலாளர், ‘எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது.
எங்களுடைய கஷ்டம் எங்களுடைய இருக்கட்டும் எதற்கு குடும்பத்திற்கு என்று சொல்ல மாட்டோம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை மிக அழகாக கதையாக்கியுள்ளீர்கள்’ என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டினார். இதே கருத்தை மற்ற தொழிலாளர்களும் தெரிவித்தனர். நடிகர் மற்றும் இயக்குனர் சந்தோஷ் நம்பிராஜன் நடித்து இயக்கி நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. ‘வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களும் இந்த உழைப்பாளர் தினம் படத்தைக் கொண்டாடுவார்கள்’ என்றார் இயக்குனர் மற்றும் கதாநாயகன் சந்தோஷ் நம்பிராஜன்.
The post வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தினம் சிறப்புக் காட்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.