×

கண்ணமங்கலம் அருகே சப்த கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே தஞ்சியம்மன் உடனாய சப்த கன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த தஞ்சியம்மன் உடனாய சப்த கன்னியம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் கிராம மக்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து, இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

இதையொட்டி, காலை 6.30 மணியளவில் கோ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், யாகசாலை பூஜை, தம்பதி சங்கல்பம் ஆகியன நடந்தது. தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் கலசங்கள் புறப்பட்டு தஞ்சியம்மன், சப்த கன்னியம்மன்களுக்கு 10 மணியளவில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags : Sapta Kanniyamman Temple Kumbabishekam ,Kannamangalam ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!