×

பருப்புத் தேங்காய் கூடு

முதலில் பணியாரக் கூட்டை சுத்தம் செய்து ஈரமில்லாமல் துடைத்து நெய்யை  நன்றாகத் தடவி வைக்க வேண்டும். கூட்டின் கூம்புப் பகுதியில் மெல்லியதாகக் கிழித்த பேப்பரைச் சுருட்டி அடைக்க வேண்டும். அரை அங்குலப் பகுதி அடைத்தால் போதும்  கூட்டின் கொள் அளவை அளந்து கொள்ளவும். இரண்டு  செய்வதற்காக கூட்டின் அளவைப் போல் இரண்டு பங்கு ஒடித்த தேன்குழல் செய்து கொள்ளவும். அதாவது 6 பங்கு அரிசியும், 1 பங்கு உளுத்தம் பருப்பும் கலந்து அறைத்தமாவில் செய்தது. அல்லது 2 பங்கு கடலைமாவும், 1 பங்கு அரிசி மாவும் சேர்த்து தேன் குழல் அச்சில் செய்தது. ஒடித்த தேன்குழலின் நான்கின் ஒரு பாகம் பாகு வெல்லம் வேண்டும். வாசனைக்கு ஏலக்காய்ப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில்  வெல்லத்தூளைப் போட்டுக் குறைந்த அளவில் சிறிது தண்ணீர் சேர்த்து நிதான தீயில் வைத்து இலைக் கரண்டியால் கிளறிவிட்டு  பாகைக் காய்ச்சவும். பாகு சற்றுக் குறுகி வரும்போது  துளி பாகைத் தண்ணீரில் விட்டால் கெட்டியாக உறைவதை தொட்டுப் பார்த்து உணர முடியும். இந்தப் பதத்தில்  ஏலப்பொடியுடன் உடைத்து வைத்திருப்பதைக் கொட்டிக் கிளறி அடுப்பைஅணைத்து விடவும். கூட்டில் சிறிதளவு கலவையைப் போட்டு மத்தாலோ கரண்டியாலோ அழுத்தம் கொடுத்து தட்டித் தட்டி மேற்கொண்டு போட்டு, கூடை நிரப்பி, சமனாக தட்டையாக கெட்டிப் படுத்தவும். கூட்டிலிருந்து எடுப்பதற்கு சற்று கூட்டை லேசாக சூடு படுத்தி ஒரு மணையின் மீது தட்டினால் கழன்று வந்து விடும்.

Tags :
× RELATED கன்னியா ராசி குழந்தையை வளர்ப்பது எப்படி?