×

சீர் முறுக்கு

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 8 கப்
வறுத்தரைத்த உளுந்து மாவு - 1 கப்
வெண்ணெய் - 75 கிராம்.
சீரகம் - சிறிது
பெருங்காயம் - சிறிது
உப்புதேவையான - அளவு
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு,கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து,கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.மாவிலிருந்து ஒரு உருண்டை அளவிற்கு எடுத்து பெருவிரல், ஆள்காட்டி விரல், நடுவிரல் இவற்றுக்கிடையில் மாவை வைத்து 7 சுற்று முதல் ஒன்பது சுற்று வரை அழுத்தி சுற்ற வேண்டும். இதுபோல் எல்லாவற்றையும்  முறுக்கு சுற்றும் தட்டில் செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும்  தட்டோடு முறுக்குகளைப் போடவும். முறுக்கு வெந்ததும் தட்டை விட்டுப் பிரிந்து வரும். இப்போது சுவையான, மொறுமொறுப்பான  சீர் கை முறுக்குகள் தயார்.

Tags :
× RELATED சுந்தர வேடம்