×

ஊட்டி கருவூல ஜெர்சி, பொலிகாளை பண்ணையில் அமைச்சர் ஆய்வு

ஊட்டி : ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைத்தின் பிரிவான கருவூல ஜெர்சி மற்றும் பொலிகாளை பண்ணையில் நேற்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, இப்பண்ணையில் சிறந்த மரபு திறனுள்ள உயர்ரக ஜெர்சி, ப்ரீசியன் மற்றும் கலப்பு இன காளைகள் என மொத்தம் 122 காளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. 44 விந்து சேகரிப்பு பொலி காளைகளிடம் இருந்து மாதத்திற்கு 70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை உறைவிந்து குச்சி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த உறைவிந்து குச்சி பல்வேறு தர ஆய்வுகளுக்கு பின் திரவ நைட்ரஜனில் பாதுகாக்கப்பட்டு ஈரோட்டில் உள்ள எருமையின உறைவிந்து நிலைய விநியோக மையத்திற்கு அனுப்பப்படுகிறது.அதன்பின், தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களின் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டலுக்காக விற்பனை செய்யப்படுகிறது. இந்த செயற்கை முறை கருவூட்டலினால் பசுக்களின் பால் உற்பத்தி திறனை தொடர்ந்து பெருக்க உதவுகிறது. இது நமது நாட்டில் உள்ள கறவை மாடுகளின் ஒட்டுமொத்த தரம் உயர வழிவகை செய்கிறது. அதிக உற்பத்தி திறன் மற்றும் தரமான வம்சாவழி மூலம் பால் உற்பத்தியாளர்கள் நல்ல லாபத்தை பெறலாம். கிராமப்புறங்களில் வருடம் முழுவதும் நிரந்தரமான வேலைவாய்ப்பினை உருவாக்க வழி வகை செய்கிறது. இப்பண்ணை ஐஎஸ்ஒ., தரச்சான்று பெற்ற நிறுவனம் என துணை பொது மேலாளர் விரிவான விளக்கம் அளித்தார்.தொடர்ந்து, பண்ணையின் பணி விவரம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நாசர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணைய நிர்வாக இயக்குநர் சுப்பைய்யன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்….

The post ஊட்டி கருவூல ஜெர்சி, பொலிகாளை பண்ணையில் அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Ministerial Inspection ,Polikalai Farm ,Ooty Treasury Jersey ,Ooty : ,Treasury Jersey ,Tamil Nadu Milk Producers Cooperative Union ,Ooty Pinkerpost ,Dinakaran ,
× RELATED ஊட்டி கருவூல ஜெர்சி, பொலிகாளை பண்ணையில் அமைச்சர் ஆய்வு