×

பிளஸ் 2 பொதுத்தேர்வில் மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை

பரமத்திவேலூர் : பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022ல் நடைபெற்ற பிளஸ் -2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவன் சக்தி பிரபாகரன் 600க்கு 594 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் பாடவாரியாக தமிழ் 97 , ஆங்கிலம் 98, இயற்பியல் 100, வேதியியல் 100, உயிரியல் 100, கணிதத்தில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவன் வருனேஷ் 593 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் 2ம் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழ் 96 , ஆங்கிலம் 97, பொருளாதாரம் 100, வணிகவியல் 100, கணக்குப்பதிவியல் 100, வணிக கணிதம் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மாணவி தீபிகா 600க்கு 589 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பெற்றுள்ளார். அவர் தமிழ் 98, ஆங்கிலம் 98, இயற்பியல் 93, வேதியியல் 100, கணினி அறிவியல் 100, கணிதம் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.  கணினி அறிவியலில் 20 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதே போல், வேதியியல் பாடத்தில் 11 மாணவர்களும், உயிரியலில் 6 மாணவர்களும், கணிதத்தில் 4 மாணவர்களும், பொருளாதாரத்தில் 2 மாணவர்களும், தமிழில் 3 மாணவர்களும், இயற்பியல், வணிகவியல், கணக்கு பதிவியல், வணிக கணிதவியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு மாணவரும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 3 மாணவர்கள் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 2 மாணவர்கள் 98 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.தேர்வு எழுதிய அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 590க்கு மேல் 2 பேரும், 585 மேல் 8 பேரும், 580க்கு மேல் 12 பேரும், 570 மேல் 18 பேரும், 500க்கு மேல் 97 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, பள்ளியின் தலைவர் பழனியப்பன், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வழக்கறிஞர் வெங்கடாசலம், பள்ளியின் துணை தலைவர் சுசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வி தங்கராஜூ, பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்….

The post பிளஸ் 2 பொதுத்தேர்வில் மலர் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Plus 2 ,Metric ,Paramathivelur ,Plus-2 Public School ,Paramathi Vellur Thaluka Paramathi Flower Metric HC School ,Plus 2 Flower Metric School ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் பிளஸ்...