×

அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு; கோவை, திருவாரூரில் ரயிலை மறித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

கோவை: அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கோவையில் மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் கோவை- நாகர்கோயில் செல்லும் ரயிலை மறித்து இந்திய மாணவ சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அவர்கள், ஒன்றிய அரசு உடனடியாக அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியும், ஒன்றிய அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் நீண்ட நேரமாக ரயில் பாதையில் அமர்ந்து இதே கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி அகற்றினர். முன்னதாக, காலையில் இந்திய ஜனநாயக வாலிப சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல், இந்திய மாணவ சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். அக்னிபாதை திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு கைவிடவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் பொதுமக்களும் தங்களுடன் இணையவேண்டும் என்று கோரிக்கை வைத்து கோஷங்கள் எழுப்பினர். இதேபோல, திருவாரூரில் மாணவர் அமைப்பினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து, இன்று திருவாரூரில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய வாலிபர் சங்கம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எர்ணாகுளம்- நாகப்பட்டினம் செல்லும் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தனர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து தடுக்க முற்பட்டனர். ஆனால், பேரணியாக வந்த மாணவர்கள் தடுப்புகளையும் மீறி ரயில் நிலையம் உள்ளே நுழைந்து ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் உடனடியாக அவர்களை கைது முற்பட்டனர். இதனையடுத்து மாணவர்கள் கீழே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், மாணவர்களுக்கும்- போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. …

The post அக்னிபாதை திட்டத்திற்கு எதிர்ப்பு; கோவை, திருவாரூரில் ரயிலை மறித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Agnipad ,Thiruvarur, Govai ,Kori Temple ,Agnibad ,Government of the Union ,Agnipadai ,
× RELATED அக்னிபாதை திட்டத்திற்கு எதிராக 27ம்...