ஈரோடு: ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன் (42) என்பவர் நேற்று மாலை ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார். வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19ம் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகருக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார். அவரிடம், ‘டாக்டர் எங்கே’ என கேட்டபோது, ‘நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவமனை மருத்துவர்’ என கூறி, எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல், ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.இதற்கிடையில் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரின் மகன் அஸ்வின் என்பதும், அவர் அரசு மருத்துவர் இல்லை என்பதும் தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகர், பெண் மருத்துவர் சண்முகவடிவு தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்….
The post தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த டாக்டரின் மகன் மீதும் நடவடிக்கை: போலீசில் தொழிலாளி புகார் appeared first on Dinakaran.
