×
Saravana Stores

ராக்கி சாவந்துக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த இயக்குனர்: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ராக்கி சாவந்துக்கு இயக்குனர் செக்ஸ் டார்ச்சர் கொடுத்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் ராக்கி சாவந்த். பாலிவுட் நடிகையான இவர், கவர்ச்சியான வேடங்களில் மட்டுமே நடிப்பார். இவருக்கு சில மாதங்கள் முன் திடீரென உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக அழுதபடி ராக்கி சாவந்த் பேட்டியும் தந்தார். தற்போது வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ஹுமான்சு பர்ஜாத்யா என்பவர், புது படத்தில் நடிக்க ராக்கி சாவந்தை அணுகினார். தனது உடல் நலம் சரியில்லை எனக் கூறி ராக்கி சாவந்த் அந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார். ஆனால் ஹுமான்சு தொடர்ந்து அவரை பல நாட்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதையடுத்து கதை சொல்வதற்கு தனது வீட்டுக்கு வரும்படி ராக்கி சாவந்த் அழைத்தார். கதை சொல்ல வந்த ஹுமான்சு, ராக்கி சாவந்திடம் அத்துமீறி நடந்துகொண்டாராம்.

இது குறித்து ராக்கி சாவந்த் கூறும்போது, ‘என்னிடம் ஹுமான்சு கதை சொல்லும்போதே அது எனக்கு பிடிக்கவில்லை. இந்த படம் வேண்டாம் என சொல்ல முற்பட்டேன். அப்போது எனது கால்களை தனது கால்களால் அவர் வருடினார். என்ன செய்கிறீர்கள் என நான் கேட்டதும், இது சகஜம்தானே என சொன்னவர், என் ைககளை இருக்கமாக பிடித்தார். மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடுங்கள் என சொல்லியும் கேட்காமல் சிரித்தபடி அமர்ந்திருந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. உடனே போன் எடுத்து போலீசுக்கு தகவல் சொல்ல முற்பட்டேன். உடனே அங்கிருந்து அந்த இயக்குனர் ஓடிவிட்டார்’ என்றார். இந்த தகவல் பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ராக்கி சாவந்துக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த இயக்குனர்: பாலிவுட்டில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sawant ,Bollywood ,Mumbai ,Rakhi Sawant ,Rocky Sawant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மான் வேட்டை பழிதீர்க்கும் விவகாரமாக...