×

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை கூட்ட வேண்டும்: பிரதமருக்கு, திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமரை, திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக முதல்வர், பிரதமரை வலியுறுத்தியிருப்பதை வரவேற்கிறோம். இந்தியக் கூட்டாட்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழக முதல்வர் வலியுறுத்தி இருப்பது போல ஆண்டுக்கு மூன்று முறை மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமரைக் கேட்டுக்கொள்கிறோம். பிரதமராக மோடி பொறுப்பேற்றதற்குப் பிறகு, 2016ம் ஆண்டு ஜூலை மாதம் 16ம் தேதி அவரது தலைமையில் அக்கவுன்சிலின் 11வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இரண்டாவது முறையாக பிரதமராக அவர் பொறுப்பேற்ற பிறகு ஒன்றிய அரசு நிறைவேற்றிவரும் பல சட்டங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், மாநில மக்களுக்கு தீங்கிழைப்பதாகவும் அமைந்துள்ளன என்பதையும், அந்த சட்ட மசோதாக்கள் போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை என்பதையும் இன்றைய தமிழக முதல்வர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.தமிழக முதல்வரின் வரலாற்றுச் சிறப்புக்குரிய இந்தக் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாநிலங்களுக்கிடையிலான கவுன்சில் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமரை வலியுறுத்துகிறோம். தமிழக முதல்வர் எடுத்திருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முன்முயற்சிக்கு அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைத்துக் கட்சிகளும் ஆதரவு நல்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சிலை கூட்ட வேண்டும்: பிரதமருக்கு, திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Inter-States Council ,Chief Minister of Tamil Nadu ,Thirumavalavan ,Chennai ,Tirumavalavan ,Tamil ,Nadu ,Chief Minister ,Chief of ,Tirumavavan ,
× RELATED வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும்...