×

கரன்சி பகுதியில் அதிகரித்து வரும் விதி மீறிய கட்டிடங்கள் -மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குன்னூர் :  குன்னூர் அருகே கரன்சி பகுதியில் விதி மீறிய கட்டிடங்கள் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் நீரோடைகள், சதுப்பு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக குன்னூர் பகுதியில் அதிகளவில் விதி மீறிய கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு என அதிகரித்து வருகிறது. அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவது, தேயிலை தோட்டங்களை அழித்து சாலை அமைப்பது மற்றும் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் காட்டேஜ்கள் கட்டும் பணிகள் பெருமளவில் நடைபெற்று வருகிறது. ஆற்றினை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால்  மழைப்பொழிவு காலங்களில் வெள்ள நீர் வரத்து அதிகரித்து பேரிடர் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் குன்னூர் அருகே கரன்சி பகுதியில் பல அடி உயரத்திற்கு விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டி வருகின்றனர். இந்த பகுதி பர்லியாறு ஊராட்சிக்குட்பட்ட பகுதியாகும்.  சமீபத்தில் பர்லியாறு ஊராட்சி செயலர் சரிவர‌ பணி மேற்கொள்ளாததால் மாவட்ட கலெக்டர் அவரை சஸ்பெண்டு செய்தார். எனவே அந்த  ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தற்போது பல மடங்கு உயரத்தில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் போன்ற முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ள பகுதிகள் என்பதால் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக விதி மீறிய கட்டிடங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் அதிகரித்து வருகிறது.  பெரு மழைக்காலத்தில் இது போன்று விதி மீறி ஈடுபடுவதால் பேரிடர் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post கரன்சி பகுதியில் அதிகரித்து வரும் விதி மீறிய கட்டிடங்கள் -மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karanji ,Coonoor ,Karansi ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்