×

கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து குருவாட்டுச்சேரி ஊராட்சியை மக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: கிராம நிர்வாக அலுவலரின் செயல்பாட்டை கண்டித்து குருவாட்டுச்சேரி கிராம நிர்வாக அலுலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள குருவாட்டுச்சேரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் பாக்கிய ஷர்மா. இவர் வந்தபிறகு கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே இருப்பதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் அவர், அரசாங்கத்தால் கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தில் பணி செய்யாமல் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டு கிராம மக்களை அலைக்கழிப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் முழுநேரமாக திறந்து செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் கிராம நிர்வாக அலுவலகம் பூட்டியே கிடப்பதால் மாணவர்களுக்கு தேவையான சாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ்கள் பெற அலைய வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் கொடுக்கின்ற சான்றிதழ்களை நிராகரிப்பதாகவும் மாணவர்களின் சேர்க்கை நேரத்திலும் சான்றிதழ்கள் தயார் செய்ய வாரக்கணக்கில் மாணவர்களையும் பெற்றோர்களையும் அலைய விடுவதாகவும் கிராம நிர்வாக அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகத்தை 50க்கும் மேற்பட்ட மக்கள் இன்று முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ‘’கிராம நிர்வாக அலுவலரை உடனடியாக இட மாற்றம் செய்யவேண்டும். அரசு கட்டிடத்தை புறக்கணித்துவிட்டு சொகுசு கட்டிடத்தில் பணி செய்வதற்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்தனர்….

The post கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து குருவாட்டுச்சேரி ஊராட்சியை மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Kuruvattucherry panchayat ,Kummidipoondi ,Guruvathucherry ,administration ,Tiruvallur… ,Kuruvattucherry ,Panchayat ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...