×

‘மாடர்ன்ஸ் மாஸ்டர்ஸ்’ என்ற பெயரில் எஸ்.எஸ்.ராஜமவுலி பற்றிய ஆவணப்படம்

ஐதராபாத்: திரைக்கு வந்த ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘சிம்ஹாத்ரி’, ‘சை’, ‘சத்ரபதி’, ‘விக்ரமார்குடு’, ‘யமதொங்கா’, ‘மஹதீரா’, ‘மரியாத ராமண்ணா’, ‘ஈகா’, ‘பாகுபலி 1’, ‘பாகுபலி 2’, ‘ஆர்ஆர்ஆர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர், எஸ்.எஸ்.ராஜமவுலி (50). அவரது படங்கள் பல மொழிகளில் வெளியாகி, பலதரப்பு ரசிகர்களை ஈர்த்து இருக்கிறது. அவருடைய பான் இந்தியா படங்கள், மிகப் பெரிய ஹிட்டாகி வசூலில் சாதனை படைத்துள்ளன. அவரது இயக்கத்தில் வந்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் 1,350 கோடி ரூபாய் வசூலித்தது. சில படங்களிலும், விளம்பரங்களிலும் நடித்துள்ள அவர், அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் பான் இந்தியா படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், திரைத்துறையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பங்களிப்பை பாராட்டும் விதமாக, அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட், பிலிம் கம்பேனியன் ஸ்டுடியோஸ் சேர்ந்து ‘மாடர்ன் மாஸ்டர்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதை ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். இது எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிறந்தநாளான வரும் ஆகஸ்ட் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கை, திரையுலக வாழ்க்கை குறித்து இடம்பெறுகிறது. ஜேம்ஸ் கேமரூன், ஜோ ரஸ்ஸோ, கரண் ஜோஹர், நடிகர்கள் பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராணா டகுபதி, ராம் சரண் ஆகியோர் எஸ்.எஸ்.ராஜமவுலி குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளதாக தெரிகிறது.

The post ‘மாடர்ன்ஸ் மாஸ்டர்ஸ்’ என்ற பெயரில் எஸ்.எஸ்.ராஜமவுலி பற்றிய ஆவணப்படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : SS Rajamouli ,Hyderabad ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மேடை சரிந்தது பிரியங்கா மோகன் உயிர் தப்பினார்