×

நினைத்த காரியங்கள் வெற்றியடைய செய்யும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

திருவானைக்காவல் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அன்னை அகிலாண்டேஸ்வரி காலையில் லட்சுமி தேவியாகவும், உச்சிவேளையில் பார்வதி தேவியாகவும், மாலையில் சரஸ்வதி தேவியாகவும் திகழ்வதாக ஐதீகம். அன்னைக்குப் பகல் நேரத்தில் பல வண்ண ஆடைகள் அணிவித்தாலும் இரவில் வெண்ணிற ஆடையை மட்டுமே அணிவிப்பது வழக்கம். இந்த அம்பாளுக்கு அகிலாண்டேஸ்வரி, அகிலாண்ட நாயகி, அகிலாண்டவல்லி, தண்டினி, தண்டநாயகி, சிதானந்த ரூபினி, ஞானமுதல்வி, கெளரி, பராபரை, மங்கை, குண்டலி, திரிபுர ஆயி, நாதவடிவி, அகிலம் புரத்தவள் என்று பல திருநாமங்கள் உண்டு.

இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வழிபாடு செய்பவர்கள், ‘‘அமுத ராகு’’ என்னும் நித்திய பதவியை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது. அன்னை அகிலாண்டேஸ்வரியை வெள்ளிக்கிழமைகள்தோறும், குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டால் வருடம் முழுவதும் பலன் கிடைக்கும். இங்கு சில மணிநேரம் தங்கியிருந்து அன்னையின் திருநாமங்களை உச்சரித்து வந்தால் எடுத்த காரியம் எல்லாம் வெற்றி அடையும் என்பது சித்தர் பெருமக்களின் வாக்காகும்.

Tags : Thiruvanaikaval Ahilandeswari ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?