×

55 வயது ஹீரோவுடன் 22 வயது நடிகை நெருக்கம்: நெட்டிசன்கள் கடும் தாக்கு

ஐதராபாத்: 55 வயது நடிகருடன் 22 வயது நடிகை ஆபாசமாக நெருக்கம் காட்டியிருப்பதற்கு நெட்டிசன்கள் கொதித்துப்போயுள்ளனர். தெலுங்கு நடிகர் ரவிதேஜாவுக்கு 55 வயதாகிறது. தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்த இவர், இப்போது கிளு கிளுப்பான படமொன்றில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ‘மிஸ்டர் பச்சன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் 22 வயதே ஆன பாக்யஸ்ரீ என்பவர் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இதில் பாக்யஸ்ரீயுடன் ரவிதேஜா கடும் நெருக்கம் காட்டி நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அந்த காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த டீசரை பார்த்த நெட்டிசன்கள், ரவிதேஜாவை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். ‘வயதான ஹீரோவுக்கு இளம் நடிகை ஜோடியாக நடிப்பது வழக்கம்தான். ஆனால் இதுபோல் ஆபாசமாக யாருமே நடித்தது கிடையாது. மகள் வயதுடைய ஒருவருடன் இப்படி நடிக்கலாமா?’ என நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ‘டீசரில் வரும் காட்சிகளெல்லாம் முகம் சுழிக்க வைக்கிறது. இதை பார்க்கும் பிஞ்சு நெஞ்சங்கள் தவறான வழியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்’ என ஒரு நெட்டிசன் கருத்து பதிவிட்டுள்ளார். இதுபோல் பலரும் இந்த காட்சிகளுக்கு கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். சென்சாரில் இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

The post 55 வயது ஹீரோவுடன் 22 வயது நடிகை நெருக்கம்: நெட்டிசன்கள் கடும் தாக்கு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,Ravideja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சமந்தா நிஜ ஹீரோயின் அலியா பட் சர்ட்டிபிகேட்