- கமல்ஹாசன்
- ஷங்கர்
- மணிரத்தினத்தால்
- சென்னை
- லைகா புரொடக்சன்ஸ்
- சிவப்பு இராட்சத திரைப்படங்கள்
- யேனாதாஜி
- கொலிவுட் படங்கள்
சென்னை: லைக்கா புரொடக்ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தியன் 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பேசியது: படத்தில் ேநதாஜி வழியே என் வழி என சொல்வதால், இப்படம் அகிம்சையை ஆதரிக்கவில்ைல என்று அர்த்தம் கிடையாது. புருஸ்லீ சண்டைபோடுவது ரசிக்கிறோம். அதற்காக வீட்டுக்கு போனதும் உறவினர்களை அப்படி அடித்துப்போட முடியுமா? அதுபோலத்தான் இதுவும்.
இந்தியன் முதல் பாகத்தில் எனக்கு 3 ஜோடிகள் இருந்தது. இதில் 3 ஹீரோயின்கள் நடித்தும் ஜோடி இல்லையே என்கிறீர்கள். அதற்கு ஷங்கருக்கு நன்றி சொல்கிறேன். காரணம், முதல் பாகத்திலேயே எனக்கு தாத்தா வேடம் தந்துவிட்டார். இதிலும் நான் தாத்தா தான். இப்போது மரத்தை சுற்றி டூயட் பாட முடியவில்லையே என வருத்தம் கிடையாது. அதற்கு இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். வயோதிக பயம் என்பதை வைத்தியம் செய்து மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்கள் நீக்கிவிட்டார்கள். இதைவிட ஒரு பயம் ஹீரோவுக்கு வேறு எதுவுமே இருக்க முடியாது.
இதற்காக அவர்களுக்கு நன்றி சொல்கிறேன். இந்தியன் 2 பிடிக்குமா? இந்தியன் 3 பிடிக்குமா எனக் கேட்டால், அம்மா பிடிக்குமா, அப்பா பிடிக்குமா என குழந்தையிடம் கேட்பதற்கு சமம். இவ்வாறு கமல் கூறினார். ஷங்கர் பேசும்போது, ‘இந்தியன் முதல் பாகம் தமிழ்நாட்டில் நடக்கும் கதை. இது இந்தியா முழுக்க நடக்கும் கதை. அதனால் பல்வேறு மாநிலங்களில் படமாக்கியுள்ளோம். கமல்ஹாசன் வரும் காட்சிகளில் எல்லாம் படப்பிடிப்பில் நான் சிலிர்த்தேன். அதே சிலிர்ப்பு கண்டிப்பாக ரசிகர்களும் உணர்வார்கள்’ என்றார்.
The post முதுமை பயத்தை போக்கிய ஷங்கர், மணிரத்னம்: இந்தியன் 2 பற்றி கமல்ஹாசன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.