பாவூர்சத்திரம் அருகே அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா துவங்கியது

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே உள்ளது அருணாப்பேரி. இங்குள்ள அழகு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மகா யாகசாலை பூஜை, தொடர்ந்து அஷ்டலட்சுமி, மற்றும் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகளும், அருகில் உள்ள ஊர்களுக்கு அம்மன் சப்பர வீதி உலா வருதல் மற்றும் திருவிழா நிறைவு நாளான ஜன.15ம் செவ்வாய்க்கிழமை காலை முதல் சிறப்பு பூஜைகளும், கோயில் வளாகத்தில் காலை முதல் இரவு வரை வில்லிசை, இன்னிசையும், பாண்ட் வாத்தியம், கணில் ஆட்டம், உறுமி மேளம், செண்டா மேளம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், இரவு அம்மன் சப்பர வீதி உலா, விரதம் இருக்கும் பக்தர்கள் பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும் மற்றும் வாண வேடிக்கைகள் நடக்கிறது. மதியம் 12 மணி முதல் பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சிவன்பாண்டி தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Muthuramaniyanam ,Arunapuri ,Pavurupadar ,
× RELATED கும்பாபிஷேக விழா