சென்னை: பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ராவை அவரது கம்பெனி மேனேஜர் உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறிய புகார் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. சுசித்ரா, நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து மணந்தார். ரேடியோ ஜாக்கியாக இருந்த இவர், பாடகியும் ஆவார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் சுச்சிலீக்ஸ் என்ற பெயரில் இவர் கோலிவுட் நடிகர், நடிகைகளின் அந்தரங்க ரகசியங்களை வெளிப்படுத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை எனக் கூறி கார்த்திக்குமார் அவரை விவாகரத்து செய்தார். பின் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சுசித்ரா, இப்போது மீண்டும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டிகளை கொடுத்து வருகிறார். அப்போது அவர் கூறிய ஒரு சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து சுசித்ரா கூறியது: பாடகியாவதற்கு முன்பு பெங்களூரில் சில நாட்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.
அப்போது எனது கம்பெனி மேனேஜருக்கு திருமணம் நிச்சயமானது. திருமணத்துக்கு முந்தைய நாள், அவர் பேச்சிலர் பார்ட்டி கொடுத்தார். அதற்கு நானும் சென்றிருந்தேன். பார்ட்டியில் மதுபானம் கொடுக்கப்பட்டது. அதை நான் தொடவில்லை. நள்ளிரவு வரை பார்ட்டி சென்றது. அப்போது அந்த மேனேஜர் கடும் போதையில் என் அருகே வந்து என் கையை பிடித்து இழுத்தார். நான் அதிர்ச்சி அடைந்தேன். எனது கையை விடும்படி சொல்லியும் கேட்கவில்லை. எனக்காக ஒரு அரை மணி நேரம் வா, ரூமுக்கு போகலாம் என்றார்.
பலமுறை கெஞ்சியும் என்னை அவர் விடவில்லை. உடனே, பாத்ரூம் சென்று வருகிறேன் எனக் கூறினேன். சீக்கிரம் வா என்று கையை விட்டார். உடனே பாத்ரூமுக்கு செல்வதுபோல் நடித்து, பின்வழியாக அந்த பார்ட்டி ஹாலில் இருந்து வெளியே வந்துவிட்டேன். அங்கிருந்து நான் தங்கியிருந்த வீட்டுக்கு நள்ளிரவில் நடந்தே சென்றேன். இந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் எனக்கு மனம் பதைபதைக்கும். இவ்வாறு சுசித்ரா கூறியுள்ளார்.
The post பேச்சிலர் பார்ட்டியில் ஃபுல் போதை சுசித்ராவை உல்லாசத்துக்கு அழைத்த மேனேஜர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.