×

வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் வேப்பிலைக்காரி மாரியம்மன் கோயில்

கடவூர் வட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் தரகம்பட்டி வேப்பிலைக்காரி மகா மாரியம்மன் கோயில். பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம், ஆண்டு தோறும் சக்தி விநாயகர், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த மாரியம்மன் கோயில் பிள்ளை வரம் வேண்டி வருவோர்க்கும், குழந்தை வரம் வேண்டி கிடைத்தவுடன், வெள்ளை கரும்பு மூலம் பெற்றோர் தங்கள் குழந்தையை தொட்டில் கட்டி கோயிலை சுற்றி வருவார்கள். மேலும் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் போன்றவை இந்த கோயிலின் சிறப்பு நிகழ்ச்சிகளாகும்.

மாரியம்மனின் சிறப்பு அம்சம்:

கோடைகாலத்தில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்ப கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடைக்காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை பெற வேண்டினர். இக்கோயில் தெய்வம் மாரி மழை அம்மன் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாரியம்மன் பல நோய்களை போக்கும் கசப்பு சுவையுடைய மரத்தைத் தலவிருட்சமாக கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்று சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்கு தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்கு தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். கோடைகாலம் என்பது 4 பருவ காலங்களில் வசந்த காலத்திற்கும், இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும்.

நீண்ட பகல் மற்றும் குறைந்த இரவின் மூலம் இக்காலத்தை அறியலாம். புவியில் அமைந்துள்ள இடத்தில் அடிப்படையில் பல பருவ காலங்கள் வெவ்வேறு நாட்கள் மற்றும் வெவ்வேறு காலங்களில் தொடங்குகின்றன. பொதுவாக தென் அரைக்கோலத்தில் கோடை காலம் நிலவும் போது வட அரைக் கோலத்தில் குளிர்காலம் நிலவும். வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கோடை காலத்தின் போது ஈரமான பருவம் நிலவுகிறது. கோடைக்காலத்தில் வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடல் பகுதிகளில் வெப்ப மண்டல புயல்கள் உருவாகி நீடித்து இருக்கும். கண்டங்களின் உட்பகுதிகளில் பிற்பகல் மற்றும் மாலை நேரங்களில் இடி மின்னல்கள் தோன்றி ஆலங்கட்டி மழையைத் தோற்றுவிக்கிறது. மாரியம்மனின் சிறப்பு அம்சமாகும்.

Tags : Vallipalayari Mariamman Temple ,
× RELATED பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்!