×

28 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை, கணவனின் உடல்களுக்காக கடற்கரையில் காத்திருக்கும் பெண்-காரைக்காலில் திரைப்படத்தை மிஞ்சும் சோக கதை

காரைக்கால் : காரைக்காலில் மீனவ கிராமமான கீழகாசாக்குடி பகுதியை சேர்ந்தவர் தனவேல் மகள் செண்பகவள்ளி. இவர் தனது 18 வயதில் 1993ம் ஆண்டு நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்த ரவி என்பவரை திருமணம் செய்து கொண்டு காரைக்காலுக்கு குடி அமர்ந்துள்ளனர். திருமணமாகி ஒன்பது மாதத்தில் செண்பகவல்லி தந்தையும் அவரது கணவரும் 1994 ஆண்டு காரைக்காலில் அப்போது துறைமுகம் இல்லாததால் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.செண்பகவல்லியின் கணவர் ரவியும் தந்தை தனவேலும் கடலுக்கு போகும் போது செண்பகவல்லி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்து வழி அனுப்பி வைத்துள்ளார்.கடலுக்கு மீன் பிடிக்க சென்றவர்கள் மூன்று நாட்கள் ஆகியும் கரை திரும்பவில்லை.இருவரின் நிலையை நாகப்பட்டினம் மீன்வளத் துறையில் விசாரித்து வந்துள்ளார் செண்பகவல்லி.அப்போது இலங்கையிலிருந்து டோக்கன் ஆபீஸ் மூலமாக தொலைபேசியில் பேசிய அதிகாரி செண்பகவல்லியிடம் கணவர் ரவி மற்றும் தந்தை தனவேல் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்ற தகவல் கிடைத்ததை கேட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் .அப்பொழுது 8 மாத கர்ப்பிணியாக இருந்த செண்பகவல்லி வழி தெரியாமல் தவித்து வந்துள்ளார் அவர்களுடன் சென்ற மற்ற மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை பத்துநாள் கழித்து திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.கரை திரும்பியவர்களிடம் விசாரித்த செண்பகவல்லி ரவி மற்றும் தனவேல் இருவரையும் இலங்கை கடற்படை சுட்டுக் கொன்று விட்டனர் என உறுதி செய்தார்.நிறை மாத கர்ப்பிணியாக இருந்த செண்பகவல்லி உடலை மீட்க போராடியும் உடல் கிடைக்காததாலும் வேறு வழி இன்றி அவரது பூர்வீக கிராமமான காரைக்கால் கீழகாசாக்குடியில் தஞ்சமடைந்துள்ளார்.மேலும் தினந்தோறும் தன் கணவன் மற்றும் தந்தையை நினைத்து கடற்கரையில் நின்று அழுதவாறு அவர்களுக்காக வேண்டி சென்று தனியாக வந்து செல்கிறார். 28 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து ஒன்பது மாதம் மட்டுமே கனவுருடன் வாழ்ந்து இலங்கை கடற்படையால் சுட்டுக் கொன்ற கணவன் மற்றும் தந்தையை நினைத்து ஏதோ ஒரு நம்பிக்கையில் மீண்டும் வருவார்கள் என்று கடற்கரையில் தினம் தோறும் காத்திருக்கும் செண்பகவள்ளியின் நிலை திரைப்பட கதையை மிஞ்சிய சோக காவியமாக அமைந்துள்ளது….

The post 28 ஆண்டுகளுக்கு முன் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை, கணவனின் உடல்களுக்காக கடற்கரையில் காத்திருக்கும் பெண்-காரைக்காலில் திரைப்படத்தை மிஞ்சும் சோக கதை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Karaikal ,Dhanvel ,Chenbagavalli ,Kadakasakudi ,Karichakal ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை