×

சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் பயணியிடம் டாக்டர் சில்மிஷம்

மீனம்பாக்கம்: சவுதி அரேபியாவிலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை சென்னை வந்து கொண்டு இருந்தது. அதில் 239 பயணிகள் பயணித்தனர். அதில் சென்னையை சேர்ந்த 35 வயது பெண் பயணி ஒருவர் வந்தார். அவருடைய இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தஞ்சாவூரை சேர்ந்த 45 வயதுடைய ஆண் பயணி ஒருவர் வந்தார். அவர் சவுதி அரேபியாவில் டாக்டராக பணியாற்றுகிறார். அந்த டாக்டர், விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த  35 வயது பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் விமானத்திலேயே  கத்தி கூச்சல் போட்டார். விமான பணிப் பெண்களிடம் புகார் கூறினார். அவர்கள் விமானியிடம் தகவல் தெரிவித்தனர். அதோடு அந்த டாக்டரை விமான பணிப்பெண்கள் கடுமையாக எச்சரித்தனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அந்தப்பெண் பயணி, விமான ஊழியர்களின் உதவியுடன், அந்த டாக்டரை சென்னை விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் செய்தார். விசாரணையில் நான் ஒன்றும் வேண்டுமென்று சில்மிஷம் செய்யவில்லை. தூக்கத்தில் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணின் மேல் கை பட்டுவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள் என்றார். இதையடுத்து அந்த பெண் பயணி, டாக்டரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டு, புகாரை திரும்பபெற்றார். இதையடுத்து 2 பேரும் சமரசம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டனர்….

The post சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் பெண் பயணியிடம் டாக்டர் சில்மிஷம் appeared first on Dinakaran.

Tags : Dr. Silmisham ,Saudi Airlines ,Fisheramakkam ,Arabian Airlines ,Saudi Arabia ,Chennai ,
× RELATED சட்டசபை தேர்தல் கூட்டணி திமுக, காங்....