×

செங்கோட்டையன், செல்லூர் ராஜுவின் சமரச பேச்சை ஏற்க மறுத்தார் ஓபிஎஸ்: இரட்டை தலைமை தொடரும் என உறுதி

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜுவின் சமரசத்தை ஓபிஎஸ் ஏற்க மறுத்து விட்டார். கட்சி தொண்டர்களுக்காக ஒற்றை தலைமையை ஏற்க முடியாது என்று ஓபிஎஸ் மறுத்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்து சமரசம் ஏற்படுத்த முயன்றார். அவரிடம் சில தகவல்களை ஓபிஎஸ் சொல்லி அனுப்பியதாக தெரிகிறது.இதையடுத்து செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்று, ஓபிஎஸ் கூறிய ஆலோசனைகளை தெரிவித்தார். அதை கேட்டுக்கொண்ட எடப்பாடி, தனது பங்குக்கு சில தகவல்களை கூறியுள்ளார். இந்த தகவல்களை தெரிவிக்க, அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை செல்லூர் ராஜு சந்தித்து பேசினார். ஆனால், எடப்பாடி சொல்லி அனுப்பிய கோரிக்கையை ஏற்க ஓபிஎஸ் மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இருவரிடம் சில சமரச திட்டங்களை செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. ஆனாலும், ஒற்றை தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். மீண்டும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை நேற்று இரவு சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்படுமா என்பது இன்று அல்லது நாளைதான் தெரியவரும். அதேபோன்று, நேற்று முன்தினம் முன்னாள் எம்பி தம்பிதுரையிடம் எடப்பாடி சொல்லி அனுப்பிய சமரச திட்டத்தை ஓபிஎஸ் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.சமரச தூது வந்தவர்களிடம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறும்போது, ‘‘ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளர் பதவி கேட்டார். அதற்கு ஓபிஎஸ் சம்மதம் தெரிவித்தார். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு மல்லுகட்டினார். கட்சி நலனுக்காக அதையும் விட்டுக் கொடுத்தார். தற்போது ஒற்றை தலைமை நான் தான் என்று எடப்பாடி கூறுகிறார். இது கட்சியில் உள்ள பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பிரச்னை. இதுவரை தனக்காக விட்டுக்கொடுத்த ஓபிஎஸ், இந்தமுறை கட்சி தொண்டர்களுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்’’ என்றனர்….

The post செங்கோட்டையன், செல்லூர் ராஜுவின் சமரச பேச்சை ஏற்க மறுத்தார் ஓபிஎஸ்: இரட்டை தலைமை தொடரும் என உறுதி appeared first on Dinakaran.

Tags : Shekottayan ,Raju ,Sellore ,OPS ,Chennai ,Chenggotayan ,Chellore ,Shekottai ,
× RELATED பலூன் விளையாட்டும்… குழந்தை செல்லூர் ராஜூம்…