×

சன்னி லியோனின் இமேஜ்: பிரியாமணி புது தகவல்

சென்னை: பிலிமினாட்டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் விவேக் குமார் கண்ணன், காயத்ரி சுரேஷ், விவேகானந்தன்.ஜி தயாரித்துள்ள பான் இந்தியா படம், ‘கொட்டேஷன் கேங்’. விவேக் குமார் கண்ணன் எழுதி இயக்கியுள்ளார். அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்ய, டிரம்ஸ் சிவமணி இசை அமைத்துள்ளார். அருண் பாரதி, அறிவு, ரூனா சிவமணி பாடல்கள் எழுதியுள்ளனர். ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி, சாரா அர்ஜூன், ஜெயப்பிரகாஷ், அஷ்ரப் மல்லிசேரி, பிரதீப் சுப்ரமணியன், அக்‌ஷயா நடித்துள்ளனர். சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் பிரியாமணி பேசும்போது, ‘இயக்குனர் என்னிடம் சொன்ன முதல் கதை சில காரணங்களால் செட்டாகவில்லை.

பிறகு சொன்ன இக்கதை பிடித்ததால் நடித்தேன். காண்ட்ராக்ட் கில்லர் சகுந்தலாவாக மாறினேன். அதிரடி சண்டைக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடித்துள்ளேன். தோற்றமும், பாடிலாங்குவேஜூம் வித்தியாசமாக இருக்கும். இதுவரை உங்களுக்கு சன்னி லியோன் பற்றி வேறொரு இமேஜ் இருந்திருக்கும். இதில் அந்த இமேஜை அவர் அடித்து நொறுக்கி இருக்கிறார். அவரது பத்மா கேரக்டர் அனைவருடைய எண்ணத்தையும் மாற்றும். ஜாக்கி ஷெராஃப் எங்களுக்கு பேருதவி செய்து நடித்தார். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது’ என்றார்.

The post சன்னி லியோனின் இமேஜ்: பிரியாமணி புது தகவல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sunny Leone ,Chennai ,India ,Vivek Kumar Kannan ,Gayatri Suresh ,Vivekanandan.ji ,Filminati Entertainment ,Arun Padmanabhan ,Drums Sivamani ,Priyamani ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED விண்ணுக்கு சென்று பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி: இஸ்ரோ தகவல்