×

மாநகர பேருந்தில் சக்கர நாற்காலியுடன் பயணிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுப்பு: கண்டக்டர் மீது புகார்

சென்னை: மாநகர பேருந்தில் பயணிக்க மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேத்துப்பட்டில் 76 வயதான மாற்றுத்திறனாளி அலெக்சாண்டர், மாநகர பேருந்தில் பயணிக்க வந்தபோது, அவரது சக்கர நாற்காலியால் இடையூறு ஏற்படும் எனக்கூறி, அவரை அனுமதிக்க கண்டக்டர் மறுத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து பாதிக்கப்பட்ட அலெக்சாண்டர் கூறியதாவது: எனது சேதமடைந்த சக்கர நாற்காலியை சரிசெய்வதற்காக அடையாறு அருகில் உள்ள பழுது நீக்கும் மையத்திற்கு செல்ல, பெரம்பூரில் இருந்து பெசன்ட்நகர் செல்லும் மாநகர பேருந்தில் (த.எண்.29சி) ஏறுவதற்காக சேத்துப்பட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு, நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு வந்தேன். அப்போது வந்த இரண்டு பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் அவற்றில் பயணிக்கவில்லை. பிறகு 3வதாக ஒரு எம்டிசி பேருந்து வந்தது. அதில் அவ்வளவாக கூட்டம் இல்லை. இதையடுத்து அந்த பேருந்தில் பயணிப்பதற்காக முன்வாசன் அருகே சென்றபோது கண்டக்டர் என்னை தடுத்தி நிறுத்தினார். எனது சர்கர நாற்காலி வைக்கும் இடத்தில் மேலும் நான்கு பயணிகளை தங்க வைக்க முடியும் என்று நடத்துனர் கூறினார். அதற்கு நான் இந்த சர்கர நாற்காலி மடிக்கக்கூடிய வகையை சேர்ந்தது என்று விளக்கி கூறினேன். அதற்கு என்னை ஏற்றிச் செல்லவோ அல்லது இறங்குவதற்கு உதவி செய்வோ யாரும் இல்லை என்று கூறிய கண்டக்டர், டிரைவரை நகரும்படி சைகை செய்தார். கடைசியாக பேருந்துகளில் 11 மணிக்கு பிறகு கூட்டம் குறைவாக இருக்கும் அப்போது வாருங்கள் என்று கூறினார். பிறகு அடையாறு செல்ல நண்பரின் ஆட்டோவை அழைத்தேன். இது முதல் முறையல்ல. பஸ்சில் பல சிரமங்களுடன் ஏறிய பிறகு எம்டிசி கண்டக்டர்கள் என்னை கீழே இறங்க வற்புறுத்திய சம்பங்கள் பல உண்டு. என் மனைவி இறந்த பிறகு நான் தனியாக வசிக்கிறேன். அரசின் மாத ஓய்வூதியம் ரூ.1,000 யை நம்பியிருக்கிறேன். எனவே எனக்கு ஆட்டோக்களில் பயணிப்பது வசதியாக இருக்காது’ என்றார். இதுதொடர்பாக எம்டிசி நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாமிடம் கேட்டபோது, ‘பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். மேலும் இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் உரிமை ஆர்வலர்கள் கூறுகையில், ‘ சக்கர வண்டியில் செல்பவர்கள் பேருந்துகளில் ஏறினால் தினசரி டிக்கெட் விற்பனையின் அடிப்படையிலான சலுகைகளை இழக்க நேரிடும் என்று நடத்துனர்கள் மாற்றுத்திறனாளிகளிடம் கூறுகின்றனர். மேலும் எந்த பேருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் இல்லை. இதனை அரசு பொறுப்பு மற்றும் தொண்டு மாதிரியாக பார்க்கிறது’ என்றனர்….

The post மாநகர பேருந்தில் சக்கர நாற்காலியுடன் பயணிக்க வந்த மாற்றுத்திறனாளிக்கு அனுமதி மறுப்பு: கண்டக்டர் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Sethupat ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...