×

பொதக்குடிஅகர பொதக்குடி இடையே வெள்ளையாற்றில் உடைந்து தொங்கும் கம்பி பாலம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகில் பொதக்குடிஅகர பொதக்குடி இடையே வெள்ளையாற்றில் ஆபத்தான நிலையில் இடிந்து தொங்கி கோண்டிருக்கும் பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக,மமக வினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி அகர பொதக்குடி இடையே வெள்ளையாற்றில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிமென்ட் காங்கிரீட் கம்பி பாலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் ஒரு குறுகிய பாலமாகும். பாலத்தின் அக்கரையில் உள்ளது அகர பொதக்குடி கிராமம். இங்கு சுமார் 250க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த பாலத்தின் வழாயாக வந்து பொதக்குடியில் உள்ள கடைகளில் வீட்டிற்கு வேண்டிய பொருள்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் பள்ளிகள், வங்கிகள், அரசு மருத்துவமனை, அங்காடி உள்ளிட்ட பல்வேறு வகையான தேவைகளுக்கு இந்த பாலத்தின் வழியாகதான் சென்று வர வேண்டும். இங்கு நடைபெறும் சுப முகூர்த்த நிகழ்ச்சிகள் கூட பொதக்குடியில் உள்ள மண்டபங்களில்தான் நடைபெறும். பிரசவம் மற்றும் அவசரத்திற்கு வாளாச்சேரி வழியாக 4 கிலோ மீட்டர் சுற்றிதான் பொதக்குடி வர வேண்டும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்த கம்பி பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வலுவிழந்ததால் ஆற்றில் தற்போது அதிகம் தண்ணீர் வரத்து காரணமாக பாலம் இடிந்து தொங்கு பாலம் போல் மாறிவிட்டது. இதனால் பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் கம்பியை பிடித்துக் கொண்டு எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். பாலத்தில் அடியில் தண்ணீர் அதிகம் ஓடுவதால் கூடுதல் பயமும் தொற்றிக்கொண்டுள்ளது. பாலம் இடிந்து தொங்குவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாளாச்சேரி வழியாக சுற்றிச் செல்கின்றனர்.எனவே பாலம் இடிந்து மிகப்பெரிய விபத்து ஏற்படும் முன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு புதிய பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி தமுமுக, மமக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பொதக்குடிஅகர பொதக்குடி இடையே வெள்ளையாற்றில் உடைந்து தொங்கும் கம்பி பாலம் appeared first on Dinakaran.

Tags : Pothakudi ,Veliyayar ,Needamangalam ,Podhakkudi ,Akara Pothakkudi ,
× RELATED நீடாமங்கலத்தில் வழிபறி வழக்கில் 2 வாலிபர்கள் கைது