×

கை, கால் செயலிழந்த வெங்கல் ராவுக்கு சிம்பு ரூ2 லட்சம் உதவி

சென்னை: காமெடி நடிகர் வெங்கல் ராவுக்கு சிம்பு ரூ2 லட்சம் கொடுத்து உதவியுள்ளார். வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி செய்தவர் வெங்கல் ராவ். கடந்த ஓரிரு ஆண்டுகளாக இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு விஜயவாடாவில் வறுமையில் வாடி வருகிறார். இந்நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பேசிய வெங்கல் ராவ், ‘என் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துவிட்டது. என்னால் நடக்க முடியவில்லை. சரியாக பேச முடியவில்லை. சினிமா தொழிலாளர்கள், சினிமா நடிகர்கள் இந்த வெங்கல் ராவ்வுக்கு உதவி செய்யுங்கள். மருத்துவ சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை’ என்றார்.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த சிம்பு, உடனடியாக ரூ2 லட்சம் பணத்தை வெங்கல் ராவின் மருத்துவ செலவுக்காக வழங்கியுள்ளார். இந்த செயலுக்காக சமூக வலைத்தளத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

The post கை, கால் செயலிழந்த வெங்கல் ராவுக்கு சிம்பு ரூ2 லட்சம் உதவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Simbu ,Venkal Rao ,Chennai ,Vengal Rao ,Vadivelu ,Vijayawada ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED Indian 2 Audio Launch - Full Video | Kamal Haasan, Simbu, Lokesh Kanagaraj, Anirudh, Nelson, Shankar