×

மார்கழி பெருந்திருவிழா, சுசீந்திரம் கோயிலில் கருட தரிசனம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி பெருந்திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 3ம் நாள் விழாவில் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் 5ம் நாளான நேற்று காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம் நடந்தது. ெதாடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்பாள், பெருமாள் மும்மூர்த்திகளை வீரமார்த்தாண்ட விநாயகர் கோயில் முன்பு கிழக்கு திசைநோக்கி நிற்க வைத்திருந்தனர். அப்போது அவர்களை கருடன் வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த காட்சியை உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். மாலையில் யானை ஸ்ரீபலி, தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், ஆன்மீக சொற்பொழிவு, இரவு வீணை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தியநாதனின் இன்னிசை, ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. விழாவின் 9ம் நாளான 22ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிச்சாடனராக வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

காலை 7.30 மணிக்கு பிள்ளையார் தேர், சுவாமி தேர், அம்மன் தேர் அலங்கரிக்கப்பட்டு தேரோட்டம் நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண காட்சி நடக்கிறது. 10ம் திருவிழாவான 23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மாலை 5 மணிக்கு நடராஜமூர்த்தி வீதி உலா வரும் நிகழ்ச்சி, 6.30 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 9 மணிக்கு ஆறாட்டு விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடு களை குமரி மாவட்ட திருக்கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் சண்முகம், சுசீந்திரம் தெய்வீக இயல் இசை நாடக சங்கத்தினர், பொதுமக்கள், தாணு மாலய சுவாமி பக்தர்கள் இணைந்து செய்துள்ளனர்.

Tags : Darshan ,
× RELATED மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை...