×

நெதர்லாந்தை புரட்டி எடுத்த இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்து உலக சாதனை: சால்ட் 122, மலான் 125, பட்லர் 162*, லிவிங்ஸ்டன் 66*

ஆம்ஸ்டெல்வீன்: நெதர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்து புதிய சாதனை படைத்தது. நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது. ஆம்ஸ்டெல்வீன் விஆர்ஏ மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீசியது. ஜேசன் ராய் 1 ரன்னில் வெளியேற, பில் சால்ட் – டேவிட் மலான் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 222 ரன் சேர்த்தனர். சால்ட் 122 ரன் (93 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார்.அடுத்து மலான் – பட்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 184 ரன் சேர்த்தது. மலான் 125 ரன் (109 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் கோல்டன் டக் அவுட்டானார். அதன் பிறகு கடைசி 5 ஓவர்களை எதிர்கொண்ட பட்லர் – லிவிங்ஸ்டன் இணை பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு 32 பந்தில் 91 ரன் சேர்த்து மிரட்டியது.இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. பட்லர் 162 ரன் (70 பந்து, 7 பவுண்டரி, 14 சிக்சர்), லிவிங்ஸ்டன் 66 ரன்னுடன் (22 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்….

The post நெதர்லாந்தை புரட்டி எடுத்த இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்து உலக சாதனை: சால்ட் 122, மலான் 125, பட்லர் 162*, லிவிங்ஸ்டன் 66* appeared first on Dinakaran.

Tags : England ,Netherlands ,Salt ,Malan ,Butler ,Livingston ,Amstelwein ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை