×

இனி நிர்வாண காட்சிக்கு நோ: திரிப்தி டிம்ரி கலக்கம்

மும்ைப, ஜூன் 25: இனிமேல் நிர்வாண காட்சியில் நடிக்க மாட்டேன் என்றார் திரிப்தி டிம்ரி. ‘அனிமல்’ இந்தி படத்தில் ரன்பீர் கபூருடன் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார் திரிப்தி டிம்ரி. இதில் அப்படி நடித்ததால் சில படங்களில் தனக்கு அதுபோலவே நடிக்க வாய்ப்பு வருவதாகவும் இதற்கு அவரது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கலக்கத்துடன் கூறியிருக்கிறார். ‘அனிமல் படத்துக்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இதில்தான் நான் கவனிக்கப்பட்டேன். கதைக்கு தேவையாக இருந்ததால் அதுபோல் நிர்வாண காட்சியில் நடித்தேன். ஆனால் அதுவே எனது பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

ஒரு சில படங்களில் இதேபோல் படு கிளாமராக நடிக்க கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். இனி அதுபோல் நடிக்க மாட்டேன். அந்த காட்சியால் எனது இமேஜை இழந்துவிட்டதாக உணர்கிறேன்’ என்றார். முன்னதாக பட ஹீரோயின் ராஷ்மிகாவை விட திரிப்திக்கே இந்த படத்தால் அதிக பெயர் கிடைத்தது என தகவல்கள் வெளியாகின. ராஷ்மிகாவின் புகழை அவர் தடுப்பதாகவும் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

The post இனி நிர்வாண காட்சிக்கு நோ: திரிப்தி டிம்ரி கலக்கம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tripti Dimri Shalakam ,Mumbai ,Tripti Dimri ,Ranbir Kapoor ,Kollywood Images ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….