×

முதியவரை தள்ளிவிட்ட பவுன்சர்: மன்னிப்பு கேட்டார் நாகார்ஜுனா

 

ஐதராபாத்: பவுன்சரால் முதியவர் தள்ளிவிடப்பட்ட விவகாரத்தில் நாகார்ஜுனா மன்னிப்பு கேட்டுள்ளார். சேகர் கம்முலா இயக்கும் குபேரா என்ற படத்தில் நாகார்ஜுனா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் பங்கேற்க வெளியூரிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் வந்தார் நாகார்ஜுனா. விமான நிலையத்தில் அவர் நடந்து வந்தபோது, முதியவர் ஒருவர் அவரிடம் பேசுவதற்காக நெருங்கி வந்தார். இதைக் கவனித்த பவுன்சர்களில் ஒருவர் அந்த முதியவரை அங்கிருந்து அப்புறப்படுத்த தள்ளினார். அப்போது நிலைகுலைந்த அந்த முதியவர் கீழே விழுந்தார். நாகார்ஜுனா இதை கவனிக்காமல் சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் நாகார்ஜுனாவை கண்டித்து கருத்துகளை வெளியிட்டனர். இந்த நிலையில் இது குறித்து நாகார்ஜுனா தனது சமூக வலைத்தளத்தில் ’இப்போதுதான் இது என்னுடைய கவனத்திற்கு வந்தது, கண்டிப்பாக இந்த நிகழ்வு நடந்திருக்கக் கூடாது, அந்த மனிதரிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.

The post முதியவரை தள்ளிவிட்ட பவுன்சர்: மன்னிப்பு கேட்டார் நாகார்ஜுனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nagarjuna ,Hyderabad ,Shekhar Kammula ,Bouncer ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனது பாதுகாவலர் தள்ளிவிட்ட ரசிகரை...