×

ஷாருக்கான் ஜோடியாகிறாரா சமந்தா?

மும்பை: பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக திகழ்ந்து வருபவர் ஷாருக்கான். அவருக்கு கடந்த ஆண்டு ஒரு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில் கடந்த ஆண்டு மட்டும் ஷாருக்கான் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. அந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலையும் வாரிக்குவித்தன. முதலாவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘பதான்’ திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

இதையடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இமாலய சாதனை படைத்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாருக்கானின் டன்கி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருந்தார்.

டன்கி திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படி ஒரே ஆண்டு மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான், அடுத்ததாக கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் ஒருபுறம் பிசியாக நடந்து வரும் நிலையில், மற்றுமொரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாராம் ஷாருக். அப்படத்தை டன்கி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தான் இயக்க உள்ளாராம்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி நடிகை சமந்தா தான் ஷாருக் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. இதன்மூலம் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர் என செய்திகள் பரவியது. கடந்த படத்தில் நயன்தாரா, தற்போது சமந்தா என தொடர்ந்து தமிழ் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார் ஷாருக்கான் என வட இந்திய மீடியா கூறி வருகின்றன. ஆனால் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிப்பவர் இன்னும் முடிவாகவில்லை என்றும் இந்த படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குவதும் சந்தேகமே என்றும் பாலிவுட்டை சேர்ந்த சிலர் கூறியுள்ளனர்.

 

The post ஷாருக்கான் ஜோடியாகிறாரா சமந்தா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Shahrukh Khan ,Samantha ,Mumbai ,Shah Rukh Khan ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….