×

சர்ஃபிரா அக்‌ஷய் குமாரை காப்பாற்றுமா?

மும்பை: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் தியேட்டர்களில் இல்லாமல் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. படம் பார்த்த அனைவருமே சூர்யாவின் நடிப்பை பாராட்டினார்கள். சூரரைப் போற்று மட்டும் தியேட்டரில் ரிலீஸாகியிருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்குமே என புலம்பியவர்கள் பலர். இந்நிலையில் தான் சூரரைப் போற்று படம் தியேட்டரில் ரிலீஸாகவிருக்கிறது. ஆனால் அதில் ஒரு சின்ன டுவிஸ்ட்.

சூரரைப் போற்று படம் சர்ஃபிரா என்கிற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அது தான் ஜூலை 12ம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தையும் சுதா கொங்கரா தான் இயக்கியிருக்கிறார். தன் மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து தயாரித்திருப்பதுடன் கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. சர்ஃபிராவில் சூர்யாவின் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்திருக்கிறார். அபர்ணா பாலமுரளி கதாபாத்திரத்தில் ராதிகா மதன் நடித்துள்ளார்.

இந்நிலையில் சர்ஃபிரா டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை பார்த்த இந்தி ரசிகர்கள் கூறுகையில், ‘அக்ஷய் குமார் இஸ் பேக். இது அவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக இருக்கும் என்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. சூப்பர் ஹிட் படம் வருகிறது’ என தெரிவித்துள்ளனர். தமிழ் ரசிகர்களோ, ‘சூரரைப் போற்று தியேட்டரில் வர வேண்டியது. ஆனால் அது சர்ஃபிராவாக வருகிறது. பரவாயில்லை. நீங்க கண்டிப்பாக ஜெயிப்பீங்க மாறா. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்கிறார்கள்.

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் சூர்யா. மேலும் சிறந்த நடிகை, இசையமைப்பாளர், சிறந்த ஃபீச்சர் படம், சிறந்த ஒரிஜினல் திரைக்கதை என சூரரைப் போற்று படத்திற்கு மொத்தம் 5 தேசிய விருதுகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூரரைப் போற்று படத்தை போன்றே சர்ஃபிராவும் விருதுகளை அள்ளிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் தோல்விகளை கொடுத்து வரும் அக்‌ஷய் குமாருக்கு இப்படமாவது வெற்றியை தர வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.

The post சர்ஃபிரா அக்‌ஷய் குமாரை காப்பாற்றுமா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sarfira ,Akshay Kumar ,MUMBAI ,Sudha Kongara ,Surarai Pototu ,Amazon ,Suriya ,Soorar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….