×

காதலரை கரம் பிடித்தார் சோனாக்‌ஷி

மும்பை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனாக்‌ஷி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌ஷி சின்ஹா இந்த ஆண்டு ‘ஹீராமண்டி’ வெப்சீரிஸ் மற்றும் ‘படே மியான் சோட்டே மியான்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், தனது நீண்ட கால காதலர் ஜாகீர் இக்பாலை அவர் கரம் பிடித்தார். மும்பையில் உள்ள சோனாக்சி சின்ஹாவின் இல்லத்தில் கோலாகலமாக திருமண விழா நடைபெற்றது. சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் வெள்ளை நிற ஜொலிக்கும் உடையை அணிந்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்துக்கு சோனாக்‌ஷி சின்ஹாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடைசியில் திருமணத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சோனாக்‌ஷி சின்ஹாவின் தந்தை நடிகர் சத்ருகன் சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் உள்ள சோனாக்‌ஷியின் பாந்திரா அபார்ட்மெண்ட் குடியிருப்பில் பாரம்பரிய சடங்குகள் ஏதுமின்றி எளிய முறையில் நடந்த திருமணத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. காதலித்து கரம் கோர்த்துள்ள சோனாக்‌ஷி – ஜாகீர் இக்பால் தம்பதிக்கு திரைப் பிரபலங்களும், ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

The post காதலரை கரம் பிடித்தார் சோனாக்‌ஷி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Sonakshi ,Mumbai ,K.S. Sonakshi Sinha ,Ravikumar ,Rajinikanth ,Anushka ,Santhanam ,Radha Ravi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….