×

குட்நைட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி

சென்னை: ‘குட் நைட்’, ‘லவ்வர்’ படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 3’ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post குட்நைட் தயாரிப்பாளர்களுடன் இணைந்த ஆர்.ஜே. பாலாஜி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : R.J. Balaji ,Chennai ,Million Dollar Studios ,M. R. B Entertainment ,R. J. Balaji ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...