×

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ‘சட்னி – சாம்பார்’ வெப் சீரீஸ் !!

தமிழ் திரையுலகில் ‘மொழி’ திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் ‘சட்னி-சாம்பார்’ சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்த வெப் சீரிஸ் எத்தனை சுவாரஸ்யமானதாக இருக்கும் என்பதை மிகத்தெளிவாக சொல்லும்படி அமைந்துள்ளது. போஸ்டரில் யோகி பாபு ஒரு டைனிங் டேபிளின் மையத்தில், அவரது அப்பாவி முகத்துடன் அமர்ந்திருக்கிறார், அவரைச் சுற்றிப் புன்னகை ததும்ப மற்ற நடிகர்கள் அனைவரும் அருகில் இருக்கின்றனர்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தத் சீரிஸில் நிழல்கள் ரவி, மைனா நந்தினி, தீபா சங்கர், சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குநர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிப் புகழ் பெற்ற அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் கே கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

The post இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் ‘சட்னி – சாம்பார்’ வெப் சீரீஸ் !! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Radhamohan ,Radha Mohan ,Mozhi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பிக்பாக்கெட், துரதிருஷ்டக்காரர்...