×

வீட்டை உடைத்து 13 சவரன் திருட்டு

ஆவடி: ஆவடியை அடுத்து வீராபுரம் கணபதி நகர் பகுதியில் வசிப்பவர் முருகேசன் (45) வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி அன்று துபாயிலிருந்து சென்னைக்கு அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை பார்க்க சென்னைக்கு வந்தார். இந்நிலையில், 14ம் தேதி குடும்பத்துடன் வாடகை கார்  எடுத்துக்கொண்டு திருப்பதிக்கு சென்று 15ம் தேதி நள்ளிரவு வீடு திரும்பினார். இவரது வீட்டின் கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை மற்றும் லெனோவா லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post வீட்டை உடைத்து 13 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Murugesan ,Veerapuram Ganapathi Nagar ,
× RELATED பைக்குக்கு மாத தவணை செலுத்த பெற்றோர்...