×

செய்யாறு அருகே நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நாக பூஜை

செய்யாறு: செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோயிலில் நேற்று நாக பூஜை நடந்தது. முன்னதாக நட்சத்திர விருட்ச விநாயகர், 27 நட்சத்திர அதிதேவதைகள், சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்ச கலச ஸ்தாபனம் நடந்தது. தொடர்ந்து ராகு, கேது சிறப்பு கலசாபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. நாக தோஷம் உள்ளவர்களுக்கான சிறப்பு தோஷ நிவர்த்தியாக 1008 ஜபம் கொண்ட விஷேச பூஜை நடைபெற்றது.

Tags : Naga Puja ,Vinayagar Temple ,vicinity ,Kodar ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா