×

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியற்ற தற்காலிக குடில்கள் அகற்றம்

*கலெக்டர் நேரில் ஆய்வுஊட்டி : கோத்தகிரி  கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் ஆடுபெட்டு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை தங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த குடில்கள், கழிப்பிடங்களை வருவாய்த்துறையினர் அகற்றினர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி வனத்தை ஒட்டிய பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருவதாகவும், கேத்தரின் நீர்வீழ்ச்சி, ஆடுபெட்டு, ஜக்கனாரை உள்ளிட்ட பகுதிகளில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் செயல்படும் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து சுற்றுலா பயணிகளை தங்க வைத்து அதிக கட்டணம் வசூலித்து வருவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து, அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் இயங்கி வரும் தற்காலிக குடில்களை உடனடியாக அகற்ற கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டார். அதன்படி, ஆடுபெட்டு, ஜக்கனாரை, கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் அங்கு உரிய அனுமதி பெறாமல் விதிமீறி அமைக்கப்பட்ட 14 குடில்கள், தனியாக கட்டப்பட்டிருந்த கழிப்பிடங்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. இப்பணிகளை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டார். அப்போது, கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெய்சங்கர், ஜெயபாலன், வருவாய் ஆய்வாளர் தீபக் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியற்ற தற்காலிக குடில்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Gotagiri ,Kotakiri Catherine Falls ,Andupetu ,Kotagiri ,Dinakaran ,
× RELATED ஊட்டி – கோத்தகிரி சாலையில் இடிந்து...