×

கொளத்தூர் ஏகாம்பர ஈஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை

கண்ணமங்கலம்: கொளத்தூர் ஏகாம்பரம் ஈஸ்வரர் கோயிலில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் சோமவார 108 சங்காபிஷேகம் நடப்பது வழக்கம். இதன்படி, நேற்றுமுன்தினம் நடந்த பூஜையையொட்டி, கோயில் உள்வளாகத்தில் யாகசாலை வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜையில் பக்தர்கள் தம்பதியர் சமேதமாக பங்கேற்றனர்.  பின்னர், பூஜையில் வைக்கப்பட்டிருந்த 108 சங்குகளிலிருந்த புனிதநீர் மூலவருக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் சிவ.கே.என்.சரவணன் தலைமையில் சிவனடியார்கள், கிராமமக்கள் செய்தனர். இதில் ஒண்ணுபுரம், கண்ணமங்கலம், குப்பம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : pooja ,Sri Lankan ,Kolathur Ekambara Eeswarar ,
× RELATED இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவியேற்பு: புத்த கோயிலில் பதவி பிரமாணம்