×
Saravana Stores

மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா

சென்னை: தமிழில் விஜய் நடித்த ‘ப்ரியமுடன்’, ‘யூத்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர், வின்சென்ட் செல்வா. இப்போது அவர் மலையாளத்தில் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘கும்மட்டிகளி’. இதில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் இளைய மகன் மாதவ் சுரேஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். இது சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 98வது படமாகும். வெங்கடேஷ்.வி, சஜித் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜாக்சன் விஜயன் இசை அமைக்கிறார். சஜு.எஸ், சந்தோஷ் வர்மா பாடல்கள் எழுதுகின்றனர்.

இப்படத்தில் இடம்பெறும் மோட்டிவேஷன் பாடல் ஒன்றை யுவன் சங்கர் ராஜா பாடினால் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழுவினர் விரும்பினர். இதையடுத்து யுவன் சங்கர் ராஜாவிடம் கேட்டனர். உடனே அவர் ஒப்புக்கொண்டார். சந்தோஷ் வர்மா எழுதிய இப்பாடலை, சென்னையிலுள்ள தனது ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் வைத்து, ஜாக்சன் விஜயன் இசையில் யுவன் சங்கர் ராஜா பாடினார். இது மலையாளத்தில் அவர் பாடிய முதல் பாடலாகும். இதற்காக அவர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

The post மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Yuvan Shankar Raja ,Chennai ,Vincent Selva ,Vijay ,Suresh Kobe ,Madhav Suresh ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எனது வெற்றிக்கு அஜித்தான் காரணம்: யுவன் சங்கர் ராஜா புகழாரம்